கன்னட சினிமாவில் 24 இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும், சின்னத்திரையில் தொடர்கள் நடித்தும் மக்களிடம் பிரபலமானவர் தான் நடிகர் திலீப்ராஜ்.
இவர் 2005 ஆம் ஆண்டு Boy Friend என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார். கடைசியாக நிம்மா வஸ்துங்கலியே நீவே ஜவாப்தாரரு என்ற படத்தில் நடித்திருந்தார்.
இவர் இன்று (13) அதிகாலை மாரடைப்பால் பெங்களூரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
.jpeg)