நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு வீதியின் கபுலுமுல்ல பகுதியில், கரவனெல்ல நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
நேற்று (10) காலை இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கரவண்டி ஓட்டுநரும், பின்னால் அமர்ந்து பயணித்த 14 வயது சிறுவனும் படுகாயமடைந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி 59 வயதுடைய முச்சக்கரவண்டி ஓட்டுநர் உயிரிழந்தார். இவர் பருஸ்ஸல்ல, யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முச்சக்கரவண்டி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தமையே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த முச்சக்கரவண்டி ஓட்டுநரும் மற்றுமொரு நபரும் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியின் பின்னால் பயணித்த ஹெம்மாதகம, வேரகொடை பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
மேலும், பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வார்ட் பிளேஸ் பகுதியில், பொரளை சந்தியை நோக்கி பயணித்த கார் ஒன்று வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதி நேற்று காலை விபத்து இடம்பெற்றது.
இதில் படுகாயமடைந்த பாதசாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹபரணை, காசியபகம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொரள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
.jpeg)