அண்மையில் நடாத்தப்பட்ட ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசாங்கம் சுமார் 44 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை இலாபம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் பாடசாலைகளுக்கு 23,000 ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்காக அண்மையில் ஆசிரியர் போட்டிப் பரீட்சையொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த முறை பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளிடம் இருந்து பரீட்சைக் கட்டணமாக சுமார் 2,700 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் உள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் உட்பட 1 இலட்சத்து 50.000 க்கும் மேற்பட்டோர் இந்த பரீட்சைக்கு விண்ணப்பித்திருந்தனர்.
இதன் மூலம் பரீட்சைக் கட்டணமாக மட்டும் மொத்தம் 44 கோடி 21 இலட்சத்துக்கும் அதிக தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
எனினும் இவர்களில் 23,000 பேர் என்ற வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையினரே ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.
.jpeg)