தமிழகக் கடற்கரையில் சடலமாக ஒதுங்கிய நெடுந்தீவு மீனவர்!

யாழ்ப்பாணம் - நெடுந்தீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்ற போது கடலில் தவறி விழுந்து காணாமல்போன இலங்கை மீனவரின் சடலம், தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் இன்று வெள்ளிக்கிழமை சடலமாகக் கரை ஒதுங்கியுள்ளது.

நெடுந்தீவுப் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவர் கடந்த 12 ஆம் திகதி கடலுக்குச் சென்ற சமயம், எதிர்பாராதவிதமாகக் கடலில் தவறி விழுந்து காணாமல்போனார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தமிழகத்தின் கோடிக்கரை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இலங்கை மீனவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளமை குறித்துத் தமிழகப் பொலிஸார் உடற்கூற்றுப் பரிசோதனைகளுடன் கூடிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post