இந்தியாவில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபாஷ் மண்டல், காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் நடந்த இடத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்றபோது, அவர் தப்பிச் செல்ல முற்பட்டதால் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மரணம் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சந்தேகநபரின் தாய், தனது மகனின் செயலைத் தான் ஒருபோதும் மன்னிக்கப் போவதில்லை என்றும், அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு உரிய தண்டனை கிடைத்துவிட்டது என்றும் ஆவேசமாகக் கூறினார்.
மேலும் காவல்துறையினர் இருவர் தங்கள் வீட்டிற்கு வந்து தன் மகன் இறந்துவிட்டதாகக் கூறினர். தன் கணவர் சுகவீனமாக இருப்பதால் என்னால் வர முடியாது என்று கூறிவிட்டேன். அவன் செய்த தவறுக்குத் தகுந்த தண்டனையை அனுபவித்துவிட்டான்.
அவனது உடலை தான் வீட்டிற்கு எடுத்து வரமாட்டேன். அவன் எவ்வித நன்மையும் செய்யவில்லை. அவன் செய்தது பெரும் குற்றம், அதற்கான தண்டனையை அவன் பெற்றுவிட்டான். அவனுக்கு எதைச் செய்தாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை," என உணர்ச்சிவசப்பட்டுத் தெரிவித்துள்ளார்.
சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை காரணமாக நாடு முழுவதும் எழுந்த கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில், பிரபாஷ் மண்டலின் இந்த முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது.
விசாரணையின் போது தப்பிச் செல்ல முயன்றபோதே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.
