பெங்களூரில் 16 வயது சிறுமி மீது துப்பாக்கிச் சூடு: குடும்பத்தினரும் உடந்தையா ?

 

பெங்களூரில் 16 வயது சிறுமி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்படும் சிறுவன், குறித்த சிறுமியின் காதலன் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த குற்றச் செயலை மறைப்பதற்காக, தனது குடும்பத்தினரின் உதவியுடன் சிறுமியின் உடலத்தை சந்தேகநபர் புதைத்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் சிறுவன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் காவல்துறையினரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும் சம்பவம் தொடர்பில் முரண்பாடான கருத்துகள் நிலவுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்துக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.