காதல் தோல்வி, விவாகரத்து, மன உளைச்சல்... இப்படி வாழ்க்கையில் கடுமையான உறவு சிக்கல்களை சந்தித்தவர்களுக்கு புதிய வாழ்க்கையை தேடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் புதிய ரியாலிட்டி ஷோ தான் செகண்ட் லவ். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய கடந்த காலத்தை கண்ணீர் கலந்த குரலில் சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் வீணா ஜெஸ்ஸி என்பவர் சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கி, வர ஸ்டுபிகா அர்ஜுன் சப் தொகுப்பாளராக இருக்கிறார் அதுபோல இந்த நிகழ்ச்சியில் 12 போட்டி அளவில் கலந்து கொண்டிருக்கின்றனர் அதில் 6 பேர் ஆண்கள், 6 பேர் பெண்கள். இந்த சீசனில் அசீம், விஜே தினேஷ், ராஜா ருத்ரகொடி, அபித் சமீர், டெஜஸ் கிருஷ்ணன், வெக்கி (விக்னேஷ்) ஆகிய ஆறு ஆண்களும், மோனிஷா சி.எஸ்., சாய் பிரியங்கா ரூத், சிந்தூரி விஸ்வநாத், ஈடன் குரியாகோஸ், நேஹா, வீணா ஜெஸ்ஸி ஆகிய ஆறு பெண்களும் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசி வருகின்றனர். அந்த வரிசையில் வீணா ஜெஸ்ஸி பேசும் போது, நான் பெங்களூரை சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்தேன். எங்களுடைய காதல் ஆறு மாதம்தான் நீடித்தது. ஆரம்பத்திலேயே அதை செய்யாதே இதை செய்யாதே என்று கட்டுப்படுத்த ஆரம்பிச்சாரு.
நான் எங்கே போனாலும் வீடியோ கால் பண்ணுவார். போட்டோ எடுத்து அனுப்ப சொல்லுவார். என்னுடன் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் யாரெல்லாம், என் கூட இருக்கிறாங்கன்னு போட்டோ எடுத்து அனுப்ப சொல்லுவாரு. அப்போ அதை அதிகமான காதல் என் என்று நினைச்சேன் என்றார். ஆனால் அந்த அன்பு பின்னர் கட்டுப்பாடாகவும் மன அழுத்தமாக மாறியது என்று கூறினார்.
ஒரு கட்டத்தில் அவர் என்னை மனுசியாக பார்க்கல, ஒரு பொருளாக பயன்படுத்துகிறார் என்று புரிஞ்சது. அடிக்கடி நிர்வாண புகைப்படங்கள் அனுப்ப சொல்லி வற்புறுத்துவார். நான் மறுத்தேன்... என்று அவர் சொல்லும்போதே கண்ணீர் வந்துவிட்டது. பிறகு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு அவர் மீண்டும் பேசினார்.
அப்போது நான் மறுத்ததற்கு பழிவாங்குற மாதிரி நாங்க சேர்ந்து எடுத்த தனிப்பட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும், இன்ஸ்டாகிராமில் போட்டார். ஆனா அதுக்கு நான் உடைந்து போகல. அந்த உறவை விட்டு வெளியே வந்துட்டேன். வெறும் ஆறு மாதம் தான் நான் அனுபவித்த வேதனை ரொம்ப பெரியது என்று வீணா ஜெஸி கூறி இருக்கிறார்.
அதேபோல வீணி ஜெஸ்ஸி யார் என்பது குறித்து பெரிதாக தகவல்கள் வெளியாகவில்லை. அவர் சோசியல் மீடியாவில் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமாக இருக்கிறார். ஆனாலும் இந்த செகண்ட் லவ் நிகழ்ச்சியில் தன்னுடைய காதல் வாழ்க்கையல இவ்வளவு ஓபனாக பகிர்ந்து இருப்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர். இந்த வீடியோ வெளியான பிறகு சோசியல் மீடியாவில் ஆதரவாக பலர் குரல் கொடுத்திருக்கின்றனர்.
எந்த உறவாக இருந்தாலும் ஒருவருடைய விருப்பத்திற்கு எதிராக தனிப்பட்ட புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை கேட்பது தவறு. ஆறு மாதத்தில் இவ்வளவு கட்டுப்பாடு காட்டியவர் திருமணத்திற்கு பிறகு எப்படி இருந்திருப்பார்? நல்ல வேலை அந்த உறவில் இருந்து வெளியே வந்துட்டீங்க என்று அவருக்கு அட்வைஸ் கொடுக்கின்றனர்.
இன்னும் ஒரு சிலர் காதல் என்கிற பெயரில் கட்டுப்பாடு, மிரட்டல் போன்ற விஷயங்கள் எந்த உறவிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை வீணாவின் அனுபவம் பலருக்கும் பாடம் என்று கூறி வருகிறார்கள்.
