கம்பஹா மாவட்டம், அத்தனகல்ல பிரதேசத்தில் பெருமளவிலான போதை மாத்திரைகளுடன் 23 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி யுவதி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருபவர் எனப் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் வைத்திருந்த பெருமளவு போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இவருடைய தந்தை ஹெரோயின் போதைப்பொருளுடன் அண்மையில் கைது செய்யப்பட்டு, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட யுவதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
