மட்டக்களப்பு நகரில் வர்த்தக நிலையத்தில் பாரிய தீ பரவல்




மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்டக்களப்பு நகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து காரணமாக கோடிக்கனக்காண சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல சிறுவர் ஆடை வர்த்தக நிலையம் ஒன்றிலேயே இந்த தீவிபத்து சம்பவம் இன்று (07) அதிகாலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தக நிலைய தொகுதியில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் மற்றும் மாநகரசபை, காத்தான்குடி நகர சபை தீயணைப்பு வாகனங்கள் இணைந்து தீயை அணைத்த போதிலும் பெருமளவான பொருட்கள் தீயில் எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதன்போது கோடிக்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையென்பதுடன் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.