ஒடிசா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. 38 வயது மதிக்கத்தக்க பிரகாஷ் சாஹு என்பவரின் சடலம் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.
சடலத்தின் ஒரு பகுதி எரிந்த நிலையில் இருந்தது. மற்றொரு பகுதி தரையை நோக்கி இருந்ததால் அந்தப் பகுதி எரியாமல் இருந்தது. சுமார் பத்து நாட்கள் உயிரிழந்த நிலையில் சடலம் கிடந்ததால், காட்சி மிகவும் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது.
காவல்துறையினர் உடனடியாக சடலத்தைப் பார்வையிட்டு, அருகிலுள்ள காவல் நிலையங்களில் ஏதேனும் புகார் பதிவாகியுள்ளதா என சோதனை செய்தனர். அப்போது, பிரகாஷின் மனைவி சுனிதா சாஹு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது கணவரைக் காணவில்லை என்று புகார் அளித்திருந்தது தெரியவந்தது.
உடனடியாக சுனிதாவை அழைத்து சடலத்தை அடையாளம் காணச் செய்தனர். பிரேத பரிசோதனைக்குப் பின் சடலம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.
முதலில் கொலைக்கு என்ன காரணம் என்பதில் துப்பு கிடைக்காததால் விசாரணை மெதுவாக நடைபெற்றது. இந்நிலையில், பிரகாஷின் பெயரில் இருந்த இரண்டு கோடி ரூபாய் இன்சூரன்ஸ் தொகையைப் பெற சுனிதா தீவிரமாக முயற்சி செய்து வந்தார்.
இன்சூரன்ஸ் நிறுவனம் “மரணம் கொலை சம்பந்தப்பட்டது” எனக் கூறி முழு விசாரணை அறிக்கை மற்றும் நீதிமன்ற வழிகாட்டுதல் தேவை என்று தங்களின் வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் விசாரணை வேகம் பெற்றது.
பிரேத பரிசோதனை அறிக்கையில் ஒரு முக்கிய தகவல் இடம்பெற்றிருந்தது. இறந்தவரின் இடுப்புப் பகுதியில் நகத்தால் கீறிய காயம் இருந்தது. அந்தக் காயத்தின் மீது சிறுநீர் கழித்ததற்கான தடயமும் கண்டறியப்பட்டது.
இது கொலை என்பதை உறுதிப்படுத்தியது. பிரகாஷின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தபோது, “அவர் யாருடனும் பிரச்சனை செய்பவர் அல்ல, எதிரிகள் யாரும் இல்லை” என்று தெரிவித்தனர்.
காவல்துறையினர் சுனிதாவை விசாரணைக்கு அழைத்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான பதில்களை அளித்தார். கணவரின் மரணத்தில் சோகம் தெரியவில்லை; மாறாக காவல்துறையினரை குழப்பும் விதமாக பேசினார்.
அவரது செல்போன் கால் ஹிஸ்டரியை சோதித்தபோது கணவர் மற்றும் உறவினர்களுடன் மட்டுமே பேசியதாகத் தெரிந்தது. ஆனால் காவல்துறையினர் அவர் எதையோ மறைக்கிறார் என சந்தேகித்தனர்.
மேலும் விசாரணையில் சுனிதா இன்னொரு செல்போனைப் பயன்படுத்துவது தெரியவந்தது. அந்த எண் அவரது தம்பியின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அவரது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் பதிவான சிம் கார்டுகளை ஆராய்ந்தபோது, தம்பியின் பெயரில் நான்கு சிம்கள் இருப்பதும், அவற்றில் மூன்றை தம்பியே பயன்படுத்துவதும், ஒன்றை சுனிதா பயன்படுத்தி வந்ததும் உறுதியானது. இதை எதிர்கொண்டதும் சுனிதா உடைந்து அனைத்து உண்மைகளையும் ஒப்புக்கொண்டார்.
தனது நிறுவனத்தில் பணிபுரியும் ராஜேஷ் பட்நாயக் என்பவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், அவருடன் இணைந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரைத் தீர்த்துக்கட்டியதாகவும் சுனிதா ஒப்புக்கொண்டார். ராஜேஷ் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ராஜேஷின் செல்போனை ஆராய்ந்தபோது மீட்டெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காவல்துறையினரை அதிர்ச்சியில் உறைய வைத்தன.
பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட சிறுநீர் தடயத்தை உறுதிப்படுத்தும் வகையில், கணவன் இறந்த பிறகு சடலத்தின் மீது அந்த அசிங்கத்தை செய்தது சுனிதா தான் என்பது வீடியோவில் பதிவாகியிருந்தது.
ராஜேஷ் அதை விளையாட்டாக வீடியோ எடுத்து, பின்னர் டெலிட் செய்திருந்தார். மேலும், சடலத்தின் முன்பு இருவரும் நடனமாடியபடி செல்ஃபி எடுத்த வீடியோவும் கிடைத்தது. ஆனால், காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் அந்த ஆதாரம் மீட்டெடுக்கப்பட்டது.
இருவரும் சேர்ந்து திட்டமிட்டு இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது உறுதியானது. கணவர் பிரகாஷ் வழக்கமாக உண்ணும் மாத்திரைகளுக்கு பதிலாக தூக்க மாத்திரைகளை கொடுத்து அவர் தூங்கியதும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். மூச்சு திணறலில் உயிருக்கு போராடிய அவர் துள்ளி துடித்தபோது இடுப்பு பகுதியை அழுத்தி பிடித்த போது சுனிதாவின் நகக்கீறல் பட்டுள்ளது.
பிறகு, சடலத்தை காரில் ஏற்றிச்சென்று ஏரிக்கரை ஓரமாக போட்டு பெட்ரோல் மற்றும் டயர்களை போட்டு கொழுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். அங்கே மண் பகுதி அதிக ஈரமாக இருந்த காரணத்தை தரை பக்கமாக இருந்த சடலம் எரியாமல் இருந்துள்ளது. தற்போது இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியையும், குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தையும் நினைவூட்டுகிறது. இன்சூரன்ஸ் பணம் மற்றும் தனிப்பட்ட உறவுகளுக்காக ஒருவரை இழப்பது எவ்வளவு கொடூரமானது என்பதை இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது.
குடும்ப உறவுகளில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், வன்முறை அல்லது குற்றச்செயல் ஒருபோதும் தீர்வாகாது. சட்டவிரோத உறவுகள், பண ஆசை மற்றும் பழிவாங்கும் மனப்பான்மை மனித உயிர்களை காவு வாங்கும் பேராபத்துக்கு வழிவகுக்கும். பிரச்சினைகள் ஏற்பட்டால் சட்டப்பூர்வமான வழிகள், குடும்ப ஆலோசனை அல்லது நீதிமன்றத்தின் உதவியை நாடுவது மட்டுமே சரியான தீர்வாகும். மனித உயிரின் மதிப்பை உணர்ந்து, எந்த சூழலிலும் சட்டத்தை மதித்து செயல்படுவது ஒவ்வொருவரின் பொறுப்பாகும்.
