கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாப மரணம்!

கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி - இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் மின்சார இணைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.

உடனடியாகப் பளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.