உலகளவில் காதல் ஜோடிகள் டேட்டிங் செல்ல மிகவும் குறைந்த செலவாகும் நகரமாக இந்தியத் தலைநகர் டெல்லி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
Deutsche Bank மேற்கொண்ட ஆய்வின்படி, டெல்லியில் ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.9,920 (இந்திய மதிப்பில்) மட்டுமே செலவாகிறது.
மறுபுறம், உலகின் மிக அதிக செலவுடைய நகரமாக சுவிட்சர்லாந்தின் ஜெனீவா இடம்பெற்றுள்ள நிலையில், அங்கு ஒரு டேட்டிங்கிற்கு சராசரியாக ரூ.45,750 வரை செலவிட வேண்டியிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு, உலகின் பல்வேறு நகரங்களில் உணவு, பொழுதுபோக்கு மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட டேட்டிங் தொடர்பான செலவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
