தஞ்சாவூரில் மனைவியை அரிவாளால் வெட்டி தப்பிய கணவன் இப்போது ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. "என் மனைவியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை.. எதிர்காலத்தில் ஒன்றுசேர்ந்து நாங்கள் வாழுவோமோ என்றும் தெரியல.. என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் என்னுடைய மனைவி.. யாரும் என் மனைவியை திட்ட வேண்டாம். என் மகன் நல்லபடியாக வாழ வேண்டுமானால் என் மனைவி வேண்டும்" என்றெல்லாம் உருக்கமாக பேசியிருக்கிறார்.
கறம்பக்குடி அருகே உள்ள நெய்வேலி கிராமத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ்.. டிரைவராக உள்ளார்.. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 25 வயது அட்சயாவை திருமணம் செய்துள்ளனர்.. அழகுக்கலை நிபுணராக இருந்து வருகிறார் அட்சயா.. 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஆரம்பத்தில் திருச்சியில் வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார்.
தர்மராஜ் வீட்டில் இல்லாதபோது இன்ஸ்டாகிரராமில் நிறைய நேரம் செலவிட்டு வருவாராம் அவரது மனைவி அட்சயா.. அப்போதுதான் ஜோஸ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.. அடிக்கடி அட்சயா வீட்டிற்கும் ஜோஸ் வந்து சென்றுள்ளார். இது தெரிந்து மனைவியைக் கண்டித்தும் அட்சயா திருந்தவில்லையாம். ஒருமுறை ஜோஸ், தன் மனைவியோடு வீட்டுக்குள் இருக்கும்போது கையும் களவுமாக பிடித்துள்ளார் தர்மராஜ்.
இந்த கோபத்தில் 1 ஒரு வருடமாக தம்பதி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் பட்டுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.. ஆனால் மீண்டும் அங்கு ஜோஸ் வந்துவிட்டார்.
கடந்த மாதம் அப்படித்தான் ஜோஸ், தன்னுடைய மனைவியை சந்திக்க வந்துள்ளதை கேள்விப்பட்டு, ஆத்திரம் தாங்காமல் தர்மராஜ் வீட்டுக்கு ஓடினார்.. கையும் களவுமாக சிக்கிய மனைவியை வீடியோ எடுத்தும் வெளியிட்டார் தர்மராஜ்..
அந்த வீடியோவில் மனைவியிடம், "இது என்ன டிரஸ்ஸு? அவனை வெளியே வர சொல்லு. உள்ளே யாரு, வெளியே வர சொல்லு, என் பொண்டாட்டியுடன் ஏன் ஸ்டே பண்ணுறே? என்று ஆவேசத்துடன் தர்மராஜ் சீறியது பதிவாகியிருந்தது.
வீட்டிற்குள் ஜோஸை பார்த்ததுமே, மனைவியை முகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சரமாரியாக வெட்டி விட்டு குழந்தையுடன் தலைமறைவானார் தர்மராஜ்.. அதேநாளில் இன்னொரு வீடியோ வெளியிட்டு, மகனை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய போவதாக அழுது கொண்டே சொன்னார்.. ஆனால், காவல்துறையினர் சிறுவனை மீட்டு விட்டனர்.. தர்மராஜையும் கைது செய்தனர். அட்சயாவுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் இப்போது, தர்மராஜா ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.. "மக்கள் அனைவருக்கும் வணக்கம்.. என் பெயர் ராஜா.. கடந்த மாதம், நானும் என் மகனும் சாகப்போகிறோம் என்று சொல்லி வீடியோ பதிவிட்டு, அனைவரையும் கஷ்டப்படுத்தி விட்டேன்.. அந்த கோபத்தில் அப்படியெல்லாம் செய்துவிட்டேன்.. நான் அப்படி நடந்து கொள்ளும் நபரும் கிடையாது. என் மகனும், மனைவியும் இப்போது அவர்களது வீட்டில் நன்றாக இருக்கிறார்கள்..
நான் சிறையிலிருந்து அப்போதே வெளிவந்துவிட்டேன்.. சோஷியல் மீடியா பக்கம் வரக்கூடாது என்று நினைத்தேன்.. ஆனால் என் மனைவிக்கு போன் செய்து தேவையில்லாத வார்த்தைகளை சிலர் பேசுவதாக கேள்விப்பட்டேன்.. ஆனால், என் மனைவி நல்லவர்தான்.. என் மேலயும், என் பிள்ளை மேலயும் உயிராக இருக்ககூடியவர்..
அதேபோல எனக்கும் கஞ்சா, போதை பழக்கம் உள்ளதாக என் மனைவி புகாரில் கூறியிருந்தார். அப்படியெல்லாம் நான் கிடையாது.. என் மீதுள்ள கோபத்தில் என்னை பற்றி அப்போது தவறாக சொல்லிவிட்டார் என் மனைவி.
3 முடிச்சு போட்டுவிட்டதாலேயே ஒரு பெண்ணின் மனசும், உடம்பும் எனக்கு மடடுமே சொந்தம் என்று நினைக்கக்கூடியவன் நான் இல்லை.. மனைவி, மகனை விட்டால் எனக்கு யாருமில்லை.. இது என் மனைவிக்கே நன்றாக தெரிந்தும், என்னை வேண்டாம், வேண்டாம் என்று ஓதுக்கவும்தான் என்னால் அதை ஏத்துக்க முடியல.. அதனால்தான் கோபத்தில் அப்படி நடந்துவிட்டது.
என் மனைவியிடம் எப்படி மன்னிப்பு கேட்பது என்று தெரியவில்லை.. எதிர்காலத்தில் ஒன்றுசேர்ந்து நாங்கள் வாழுவோமோ என்றும் தெரியல.. என்ன தப்பு செய்திருந்தாலும், அவர் என்னுடைய மனைவி.. யாரும் என் மனைவியை திட்ட வேண்டாம். என் மகன் நல்லபடியாக வாழ வேண்டுமானால் என் மனைவி வேண்டும்..
என் பிரச்சனை இப்போது பொதுவெளிக்கு வந்துவிட்டது.. என் குடும்பத்தை நானே அசிங்கப்படுததிவிட்டு, குற்றவாளியாக நான் இன்று உள்ளேன். காவல்துறைக்கு என்னுடைய நன்றி.. அவர்கள் இலலாவிட்டால் நான் இன்று இல்லை..
என் மகனை ஒரு மாதம் நல்ல முறையில் பார்த்துக்கிட்ட குழந்தைகள் நல காப்பகத்துக்கு என்னுடைய நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.. வேற என்ன சொல்வது தெரியல.. நன்றி மக்களே" என்று தெரிவித்துள்ளார்.
