ஆலயத் தேர் திருவிழாவில் பெண்ணுக்கு நடந்த கொடுமை: களமிறங்கிய பொலிஸார்

மட்டக்களப்பு- அமிர்தகளி ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த தேர் திருவிழாவின் போது பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலி இனம் தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவமானது இன்றையதினம்(11.8.2026) இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தின் வருடாந்த தேர்திருவிழா சம்பவ தினமான இன்று காலை 8:30 மணியளவில் ஆலயத்தில் தேர் வீதி உலாவின் போது, ஆயிர்க்கணக்கான மக்கள் திரண்டிருந்த நிலையில் அதனை தரித்துக் கொண்டிருந்த மூதூரைச் சேர்ந்த 63 வயது பெண்ணின் கழுத்தில் இருந்த (2½) பவுண் தங்க சங்கிலியை இனம்தெரியாதோரால் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாட்டையடுத்து பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஆலயப் பெருவிழா நாட்களில் பெருந்திரளான பக்தர்கள் வருகை தருவதால், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தமது ஆபரணங்கள், பணப்பைகள் உள்ளிட்ட உடைமைகளின் பாதுகாப்பு குறித்து மிகுந்த அவதானத்துடனும் விழிப்புடனும் இருக்குமாறு மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.