மன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவின் மனைவியான இரு பிள்ளைகளின் தயாரான தேஷானி குணரத்ன (வயது 55), புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
தங்களுக்குச் சொந்தமான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தின் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த நிலையில், அவர் படுகாயமடைந்தவாறு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று புதன்கிழமை காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின்னர் தனமல்விலவில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.
