புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு: இன்று முதல் முக்கிய நடவடிக்கை

இந்த ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார்.

கடந்த 09 ஆம் திகதி நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் புலமைப்பரிசில் பரீட்சை நடைபெற்றது.

பரீட்சை பெறுபேறுகளை ஒரு மாத காலத்திற்குள் வெளியிடுவதற்கு திணைக்களம் எதிர்பார்த்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.