சேலையூர் அடுத்த பதுவஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (29). சேலையூர் பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் 40 வயது பெண்ணுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், அந்த பெண்ணின் 6ம் வகுப்பு படிக்கும் மகளுக்கு மோகன்ராஜ் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமி, தனது தாயிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லையாம்.
இந்நிலையில் பள்ளி ஆசிரியரிடம், சிறுமி தனக்கு நடந்த பாலியல் ெகாடுமை குறித்து தெரிவித்து உள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த ஆசிரியர், சம்பவம் குறித்து சிட்லப்பாக்கம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, சிறுமிக்கு மோகன்ராஜை பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர்.
