பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்: வாலிபர் கைது

ஊட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு அழைத்துச்சென்று 10ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த திருத்தணி வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை சேர்ந்தவர் நாகராஜ் (20). இளங்கலை பொருளாதாரம் படித்த இவர் சில காரணங்களுக்காக படிப்பை பாதியில் நிறுத்தினார்.

 இவருக்கு சமூக வலைதளம் மூலம் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி அறிமுகம் ஆனார். நீண்ட நாட்களாக இவர்கள் இருவரும் பேசி பழகி வந்துள்ளனர். 

இருவரும் அவர்களின் புகைப்படங்களை பரிமாறிக்கொண்டனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாகராஜ் அடிக்கடி ஊட்டிக்கு வந்து மாணவியை பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்றதாக தெரிகிறது. 

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மாணவி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து ஊட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி எங்கு சென்றார் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை.