நள்ளிரவில் நடந்த பயங்கரம்: பறிபோன உயிர்

கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட வீதியில் நேற்று  (15) இரவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் இத்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்தக் கொலை இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையே நிலவும் தனிப்பட்ட தகராறின் விளைவாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.