சிறைக்கு சென்றார் நீதி அமைச்சர் ஹர்ஷன!


நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினர் நேற்று யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதன்போது சிறைச்சாலையின் தற்போதைய கட்டமைப்பு நிலைமைகள், கைதிகளுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களின் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகளுடன் நீதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் விரிவாகக் கலந்துரையாடினர்.

இந்த ஆய்வு விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறீபவானந்தராஜா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.