பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை: மகாவலி கங்கை தாழ்வான பகுதிகளில் அபாயம்

 

கடந்த சில மணிநேரங்களில் மகாவலி கங்கையின் மேல் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துள்ள மழையின் காரணமாக, மகாவலி கங்கை வடிநிலப் பகுதியில் உள்ள தாழ்வான பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.

இந்த எச்சரிக்கையானது பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட மகாவலி கங்கையை அண்டிய தாழ்வான பகுதிகளுக்கு விசேடமாகப் பொருந்தும்:

* உடுநுவரை (Udunuwara)

* உடபலாத்தை (Udapalatha)

* யட்டிநுவரை (Yatinuwara)

* கங்க இஹல கோரளை (Ganga Ihala Korale)

* பஸ்பாகே கோரளை (Pasbage Korale)

* கங்கவட்ட கோரளை (Gangawata Korale)

மேற்குறிப்பிட்ட பகுதிகளில் மகாவலி கங்கைக்கு அருகில் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், இந்த நிலைமை தொடர்பில் உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவப் பிரிவுகளிடம் கோரப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களிலும் மேலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் அதி உச்ச அவதானத்துடனும் செயற்படுமாறு மிகவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.