கலவரத்தின் போது மஹர சிறை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தற்காலிக கட்டடம் ஒன்றை உடைத்துக்கொண்டு கைதிகள் குழுவொன்று தப்பியோட முயன்றுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் சிறைச்சாலை அதிகாரிகள் நுழைவாயிலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறையிலிருந்து கைதிகள் தப்பியோடி வந்திருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவோ அல்லது அவர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் எவரும் ஈடுபடவோ வேண்டாம் என்று பொதுமக்கள், பொலிஸாரால் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
