கொழும்பு 09 பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து 12 வயதுச் சிறுவன் ஒருவன் கீழே விழுந்து உயிரிழந்தான்.
இந்தச் சிறுவன் 14 மாடிகளைக் கொண்ட அந்த குடியிருப்பின் மேல் மாடியில் அமைந்துள்ள நீச்சல் தடாகத்திற்கு அருகில், மேலும் சில சிறுவர்களுடன் இணைந்து சுற்றியுள்ள காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கீழே விழுந்துள்ளான் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
