விவாகரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பு; மனைவி, மாமியாருக்கு நடந்த விபரீதம்!

விவகாரத்து கேட்ட நிலையில் கள்ளத்தொடர்பால் மனைவி மற்றும் மாமியாரை கணவன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநாதபுரம், மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் செல்லமுத்து (34). வெளிநாட்டில் கூலி வேலை செய்துள்ளார். 

இவருக்கும், ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவை சேர்ந்த சர்மிளா தாக்கூர் (31)) என்பவருக்கும் காதல் ஏற்பட்டு 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு மகன், மகள் உள்ளனர். 8 மாதங்களுக்கு முன் சர்மிளா தாக்கூரின் நடத்தையில் செல்லமுத்துவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

பிரச்னை போலீஸ் நிலையம் வரை சென்றதால் செல்லமுத்து கைதாகி, ஜாமீனில் வெளிவந்துள்ளார். இதனால் இருவரும் 7 மாதங்களாக பிரிந்து வாழ்ந்தனர். சர்மிளா தாக்கூர் வைகை நகரில் உள்ள ஒரு வீட்டில் தனது மகளுடன் வசித்து வந்தார். ஆண் குழந்தை செல்லமுத்துவின் வீட்டில் வசித்து வந்தது. 

இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது. சர்மிளா தாக்கூரின் தந்தை முனியசாமி இறந்த நிலையில் தாய் பத்மாவதி, துபாய் சென்று பணியாற்றினார். சமீபத்தில்தான் விடுமுறையில் ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார்கோயில் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். 

குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள், சந்தேகங்கள் அல்லது விவாகரத்து போன்ற சிக்கல்கள் ஏற்பட்டாலும், வன்முறை எந்த சூழ்நிலையிலும் தீர்வாகாது. பிரச்சினைகளை சட்டப்பூர்வமான வழிகளிலும், குடும்ப ஆலோசனை மற்றும் உரையாடல் மூலமும் தீர்க்க முயற்சிப்பதே பாதுகாப்பான அணுகுமுறையாகும். கோபம் மற்றும் பழிவாங்கும் மனப்பான்மைக்கு இடமளிக்காமல், பொறுமையுடனும் சட்டத்தை மதித்தும் செயல்படுவது குடும்பங்களையும் உயிர்களையும் பாதுகாக்கும்.