5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 289,867 மாணவர்களில், 56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் மறுபரிசீலனைக்கான திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்திற்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.