வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் இன்று பகல் நேரத்தில் வெப்பக் குறியீடு, கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
திறந்த வெளியில் வேலை செய்வோர் போதிய அளவு நீர் அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளைக் கவனமாகப் கவனித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அத்துடன் குழந்தைகளை ஒருபோதும் வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான உடல் உழைப்பு மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக் கொண்டு, லேசான வெள்ளை அல்லது வெளிர்நிற ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்.
