முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வெளியேறினார்.
நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மிக் வானூர்தி கொள்வனவு தொடர்பான விசாரணைகளுக்காக, வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் அவர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
