இலங்கையில் இந்த வருடம் இதுவரை 95 ஆயிரத்து 493 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மாத்திரம் நாட்டில் 10 ஆயிரத்து 157 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த வருடத்தில் டெங்கு நோய்த்தொற்று காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளனர். டெங்கு மரண வீதம் 0.076 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.
மாகாண ரீதியில் மேல் மாகாணத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அங்கு இதுவரை 50 ஆயிரத்து 506 பேர் டெங்குவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டின் 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதிகம் பரவும் அபாயப் பகுதிகளாகத் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டுள்ளன.
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் தமது வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றிச் சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்குமாறும், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
