கணவன் கண் முன் சுய இ*பத்தில் ஈடுபட்ட மனைவி: கழிவறையில் முனகல் சத்தம்



 மேற்கு வங்காளம் கொல்கத்தாவின் பெஹாலா பகுதியில் நடந்த இந்த சம்பவம், உள்ளூர் மக்களை மட்டுமல்லாமல் காவல் துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


கடந்த ஜனவரி மாதம், 32 வயது ராகுல் முகர்ஜி தனது மாமனார் பிரணப் சென் மற்றும் மாமியார் ரேகா சென் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.


“அனன்யா உங்கள் வீட்டுக்கு வந்தாரா?” என்று கேட்டார்.


பெற்றோர் ஆச்சரியம் கலந்து பயத்துடன் பதிலளித்தனர். “இல்லை. எங்கே போனாள்? என்ன ஆனது?”


ராகுல் சொன்னார்: “எங்களுக்குள் சிறிய குடும்பத் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறினாள். இன்னும் வீட்டுக்கு வரவில்லை. அதனால்தான் அங்கே வந்தாளா என்று கேட்டேன்.”


அந்த பேச்சிற்குப் பிறகு பெற்றோர் உடனடியாக உறவினர்கள், மகளின் தோழிகள் அனைவரையும் தொடர்பு கொண்டு தேடத் தொடங்கினர். விடிய விடிய தேடியும் 28 வயது அனன்யா சென் கிடைக்கவில்லை. இறுதியில் பெஹாலா காவல் நிலையத்தில் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது.


காவல்துறையினர் ராகுலை விசாரித்தனர். அவர் சொன்ன பதில் இதுதான்:


“என் மனைவி அடிக்கடி செல்போனை நோண்டிக்கொண்டே இருப்பாள். வீட்டு வேலைகளை செய்யாமல் போனை பார்த்துக் கொண்டே இருப்பாள். அதைக் கேட்டேன். அவ்வளவுதான். வாய்ச்சண்டை முற்றியது. ‘நான் உங்களுடன் வாழ மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு, இந்த போன்தானே பிரச்சனை என்று போனை கட்டிலில் வீசிவிட்டு கிளம்பிவிட்டாள்.


நான் அவள் தாய் தந்தையர் வீட்டுக்குத்தான் சென்றிருப்பாள் என்று நினைத்துவிட்டேன். நீண்ட நேரம் ஆகியும் தொடர்பு இல்லை. பதறிப்போய் மாமனார் மாமியாரை கேட்டேன். அவர்களும் வரவில்லை என்றார்கள். எனக்கு பயமாக இருக்கிறது.”


நாட்கள் நகர்ந்தன. மகள் எங்கே சென்றாள் என்று தெரியாமல் பெற்றோரும் கணவரும் அல்லாடினர். காவல்துறையும் தங்கள் தரப்பில் தேடினர். ஆனால் எந்த தடயமும் கிடைக்கவில்லை.


இந்நிலையில் தான் ஒரு மாற்றம் கவனிக்கப்பட்டது.


காணாமல் போன அனன்யாவின் தாய் ரேகா சென், மகளின் புகுந்த வீட்டுக்கு சமீபத்தில் சென்றபோது பாத்ரூமை பார்த்தார். முன்பு அந்த வீட்டின் கழிவறையில் தண்ணீரில் மீன்கள் துள்ளி விளையாடுவது போன்ற டைல்ஸ் ஒட்டப்பட்டிருந்தது. அதற்கு பொருத்தமாக நீல நிற சொரசொரப்பான டைல்ஸ் தரையில் பதிக்கப்பட்டிருக்கும். ஆனால், இப்போது வெள்ளை நிற டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது.


ரேகா அப்போது மருமகனிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. தன் கணவர் மற்றும் உறவினர்களிடம் மட்டும் சொல்லி சந்தேகத்தை எழுப்பினார்.


கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் காவல் நிலையத்துக்கு வந்தார். கண்ணீருடன் புகார் கொடுத்தார்.


“என் மருமகன் மீது எனக்கு சந்தேகம் இருக்கிறது. அவர்களுடைய பாத்ரூம் டைல்ஸ் மாற்றப்பட்டிருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் ஏன் டைல்ஸ் மாற்ற வேண்டும்? ஏதோ மர்மம் இருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு வேறொரு வழக்கில் பாத்ரூமில் ஒருவரை மறைத்த சம்பவம் கேள்விப்பட்டேன். அதனுடன் இதனை ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.”


உஷாரான காவல்துறையினர் உடனடியாக ராகுலை அழைத்து கேட்டனர். “ஏன் பாத்ரூம் டைல்ஸ் மாற்றினீர்கள்?”


அவர் பதறினார்.


அடுத்து அவரது தந்தை திபக் முகர்ஜி மற்றும் தாய் சுமித்ரா முகர்ஜியை தனித்தனியாக விசாரித்தனர். மூவரும் விதவிதமான காரணங்களைச் சொன்னார்கள். காவல்துறையின் சந்தேகம் வலுப்பெற்றது.


“நாங்கள் அந்த பாத்ரூமை உடைத்துப் பார்க்க வேண்டும்” என்று முடிவு செய்தனர்.


உள்ளே சென்றதும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர். அழுகிய நிலையில் அனன்யாவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.


இந்த செய்தி பெஹாலா பகுதியை மட்டுமல்ல, சுற்றுவட்டாரத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ராகுல் முகர்ஜி மற்றும் அவரது தாய் தந்தையர் மூவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.


விசாரணையில் ராகுல் சொன்னதாவது:


“சம்பவம் நடந்த அன்று வீட்டுக்கு வெளியே இருக்கும் பாத்ரூமிலிருந்து முனகும் சத்தம் கேட்டது. என்ன என்று ஜன்னல் வழியாகப் பார்த்தேன். என் மனைவி யாருடனோ வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டு அந்தரங்க செயலில் ஈடுபட்டிருந்தாள்.


அதைப் பார்த்ததும் எனக்குள் கோபம் பெருக்கெடுத்தது. பிளாஸ்டிக் பாத்ரூம் கதவை உடைத்தேன். உள்ளே அவள் பேசிக்கொண்டிருந்தது யார் என்று பார்த்தேன். அப்போதுதான் இன்னொரு உண்மை தெரியவந்தது.


நான் மென்பொருள் பணியாளர். கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சரியான வேலை இல்லை. கிடைக்கும் வேலைகளை செய்துகொண்டு சொற்ப வருமானம்தான். வீட்டில் கடுமையான கடன் பிரச்சினை.


செலவு செய்ய முடியவில்லை. இந்த நிலையில் என் மனைவி ஆன்லைனில் பலரிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்களுக்கு தன் அந்தரங்க காட்சிகளை காட்டி பணம் சம்பாதித்து வந்திருக்கிறாள். இதன் மூலம் கிட்டத்தட்ட 30 லட்சம் ரூபாய் சம்பாதித்திருக்கிறாள் என்பதும் தெரியவந்தது.”


காவல்துறையினர் இதை சரிபார்த்தனர். அனன்யாவின் வங்கிக் கணக்கில் சுமார் 30 லட்சம் ரூபாய் இருந்தது. அந்த தொகை குறிப்பிட்ட ஆன்லைன் தளங்களிலிருந்து வந்திருப்பதும் உறுதியானது.


ராகுல் மேலும் ஒரு செல்போனை ஒப்படைத்தார். “எனக்குத் தெரியாமல் அவள் வேறு போனை பயன்படுத்தி வந்தாள். அந்த போன் இப்போது என்னிடம்தான் இருக்கிறது.”


அந்த போனில் தொடர்புகள், வங்கி விவரங்கள், பல ஆண்களுடன் நடந்த சேட்டிங்குகள் அனைத்தும் இருந்தன.


காவல்துறையினர் ராகுலை முதன்மை குற்றவாளியாகக் கைது செய்தனர். சம்பவத்தை மறைக்க உதவியதாக அவரது தாய் தந்தையரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பெஹாலா பகுதியில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விசாரணை தொடர்கிறது.