விபத்தில் 18 வயது தமிழ் மாணவி பலி

 

பிரான்ஸில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை தமிழ் மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் Seine-Saint-Denis மாவட்டம், Aulnay-sous-Bois நகரில் நேற்று முன்தினம்( 23ஆம் திகதி) இடம்பெற்ற கோர வீதி விபத்தில், பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த 18 வயதுடைய தமிழ் மாணவி ஒருவர் பாரவூர்தி மோதியதில் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோழியுடன் மின்சார ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணை மீட்டெடுக்க அவசர சிகிச்சைப் பிரிவினர் போராடியபோதும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

விபத்தை ஏற்படுத்திய பாரவுந்தின் சாரதி பொலிஸாரால் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் அத்துடன் உயிரிழந்த மாணவியுடன் பயணித்த மற்றைய மாணவி காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.