எல் நினோ (El Niño) தாக்கம் காரணமாக 2027 ஜனவரி மாதம் முதல் இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை திணைக்களத்துடன் இணைந்த வானிலை ஆய்வாளர் மாலித் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவித்துள்ள அவர், கடந்த சில மாதங்களாக எல் நினோ தாக்கம் காரணமாக இலங்கையில் வழக்கத்தை விட அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த அதிக மழைவீழ்ச்சி நிலை எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என்று கூறியுள்ளார். அதன் பின்னர் மழைவீழ்ச்சி படிப்படியாகக் குறையலாம்.
2027 ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழைவீழ்ச்சி கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது எனினும், எல் நினோ தாக்கம் எதிர்வரும் 2027 ஏப்ரல் மாதம் வரை நீடிக்கக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
மழைவீழ்ச்சி குறைவதால் விவசாயம், குடிநீர் விநியோகம் மற்றும் நீர்மின் உற்பத்தி ஆகிய துறைகளில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டியுள்ளது.
