டயகம – அக்கரபத்தனை, கிளாஸ்கோ தமிழ் பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்காகி டயகம பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மாணவிகள் காட்டுப் பாதையூடாக பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அருகிலுள்ள தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மாணவிகளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பாடசாலை அதிபருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன், ஏனைய இருவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
