அம்பாசமுத்திரத்தில் அஞ்சலி செலுத்தும் சீமான்!

 


மாவீரர் நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் இன்று (27) தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்படுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவுள்ளார்.

அம்பாசமுத்திரம் அகஸ்தியர்பட்டியில் மாலை 4 மணியளவில் மாவீரர் நாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் நடைபெறும் என அக்கட்சி முன்னதாக அறிவித்திருந்தது.

இந்நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் உத்தியோகபூர்வ YouTube தளத்தில் “மாவீரர் நாள் – சீமான் வீரவணக்கம்” என்ற தலைப்பில் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.