முல்லைத்தீவு இரணைப்பாலையில் உணர்வுபூர்வமாக ஆரம்பமான மாவீரர் தின நினைவேந்தல்!

 


முல்லைத்தீவு - இரணைப்பாலையில்  மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று முன்னர் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின. 

இன்றையதினம் (27.11.2026), ஈழப் போராட்டத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் வகையில் வடக்கு - கிழக்கு மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு இரணைப்பாலையில் உணர்வுபூர்வமாக நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.