நாடாளுமன்றில் தொடரும் வரவு – செலவுத் திட்ட விவாதம்!

 


2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதத்தின் ஐந்தாம் நாள் அமர்வு இன்று (25) நடைபெறுகின்றது.

இதற்கமைய, இன்றைய (27.11.2026) நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் சபாநாயகர் தலைமையில் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

2027ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நவம்பர் 12ஆம் திகதி சமர்ப்பித்ததைத் தொடர்ந்து, நவம்பர் 13ஆம் திகதி முதல் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் தொடங்கியது.

இதனையடுத்து வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, கடந்த 20 ஆம் திகதி 97 வாக்குகள் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மொத்தம் 157 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்ததுடன் 60 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.

இந்தநிலையில் கடந்த 21 ஆம் திகதி ஆரம்பமான குழு நிலை விவாதம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் அன்றைய தினம் மாலை 6.00 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.