தேராவில் நினைவுத்தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்திய உறவுகள்!

 


முல்லைத்தீவு - விசுவமடு தேராவிலில் நினைவுத்தூபியில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்றுமுன்னர் ஆரம்பமாகின. 

இதன்போது, உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தினர்.

இதனையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து உயிர்நீத்த மாவீரர்களின் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்