மன்னார் - ஆட்காட்டிவெளியில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வுகள் சற்று முன்னர் உணர்வுபூர்வமாக ஆரம்பமாகின.
இன்றையதினம் (27.11.2026), ஈழப் போராட்டத்தில் தமது உயிர்களைத் தியாகம் செய்த போராளிகளை நினைவுகூரும் வகையில் வடக்கு - கிழக்கு மக்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில், தமிழ் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மன்னார் - ஆட்காட்டிவெளியில் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
ஆட்காட்டிவெளியில், உயிர்நீத்த மாவீரர்களை நினைவுகூர உணர்வுபூர்வமாக மக்கள் தயாராகியுள்ளனர்.
