கண்ணீரில் கரைந்தது கனகபுரம்

 


கிளிநொச்சி மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மாவீரர்களின் பெற்றோரும் ஒன்றுகூடி கண்ணீர் மல்க தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.

மாலை 6.05 மணிக்கு பிரதான பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உறவுகள் தமது பிள்ளைகளின் நினைவிடங்களில் சுடரேற்றி மலர்தூவி உணர்வுபூர்வமாக அக வணக்கம் செலுத்தினர். துயிலுமில்லம் எங்கும் மக்களின் அழுகுரலும் சுடர்களின் ஒளியும் நிறைந்து காணப்பட்டது.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் தற்போது பிரதான நினைவேந்தல் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளது. 

இதன்போது,  உயிர்நீத்த மாவீரர்களுக்கு அவர்களது உறவினர்கள் மௌனமாக அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, மணியோசை எழுப்பப்பட்டு, பிரதான ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளதுடன், தொடர்ந்து  உயிர்நீத்த மாவீரர்களின் உறவுகள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்த ஆரம்பித்துள்ளனர்.  30 ஆண்டுகால தமிழீழம் கோரிய யுத்தத்தில் உயிர்த்த நீத்த மாவீரர்களை நினைவுகூருவதற்கு வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இந்தநிலையில்,  கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில், நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. 

 பிரதான நிகழ்வு இன்று மாலை 06 மணிக்கு ஆரம்பமாகவுள்ள நிலையில், கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நோக்கி பெருமளவிலான மக்கள் வருகைத் தர ஆரம்பித்துள்ளனர்.