யாழில் தகாத உறவால் நேர்ந்த வினை-கணவனை திருவளையால் அடித்தே கொன்ற மனைவிக்கு நீதிமன்று அதிரடி தீர்ப்பு

 

யாழ்ப்பாணத்தில் கணவனை திருவலையால் திருவலக்கையால் அடித்து கொலை செய்த மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று(25) எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுதே மேற்கண்டவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி, அரியாலை - பூம்புகார் பகுதியில் ஒரு பிள்ளையின் தந்தையான 32 வயதுடையவர் திருவலைக் கட்டையால் தலையில் அடித்துக் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த போது , கணவனை மனைவி திருவலைக் கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார் எனவும் , மனைவிக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தது என்பதனையும் பொலிஸார் கண்டறிந்து கொலையானவரின் மனைவி மற்றும் அவரது மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரையும் கைது செய்தனர்

இந்தச் சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் மனைவிக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், பிரதிவாதிக்கு எதிரான கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டதாகத் தெரிவித்த மேல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.     

அதேவேளை கொலையானவரின் மனைவியுடன் தொடர்பில் இருந்தவர் என கைது செய்யப்பட்ட நபர் மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் வழக்கு தொடுநர் தரப்பினால் நிரூபிக்க முடியாதமையால் சந்தேகத்தின் பலனால் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.