கிளிநொச்சியிலும் விபத்து-ஒருவர் பலி

 

கிளிநொச்சி - வட்டகச்சி பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (28.11.2026) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர், கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியைச் சேர்ந்த 70 வயதுடைய வேலு செல்லத்துரை என்பவர் ஆவார்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.