நீண்டகாலமாக மூடப்பட்டிருந்த தேசிய கலைக்கூடம்! கலைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 


பல தசாப்தங்களாக நாட்டின் கலைஞர்களின் படைப்புகளுக்கும் உணர்வுகளுக்கும் புகலிடமாகத் திகழ்ந்த கொழும்பு தேசிய கலைக்கூடம் (National Art Gallery), நீண்டகாலமாக மூடப்பட்டிருந்தமை கட்புலக் கலைத் துறைக்கும் கலை இரசிகர்களுக்கும் பாரிய குறையாகக் காணப்பட்டது.


எவ்வாறாயினும், அந்த மௌனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, எமது கலைப் பாரம்பரியத்தின் பெருமையை மீண்டும் மக்கள் மயப்படுத்தும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


தேசிய கலைக்கூடத்தை பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்து வைக்கும் நோக்கில், அதன் புனரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்துவதற்கான விசேட சிரமதானப் பணி நேற்று (நவம்பர் 28) முன்னெடுக்கப்பட்டது.


இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க, கட்புலக் கலைகள் உபகுழுவின் தலைவர் பிரகீத் ரத்நாயக்க, சிரேஷ்ட ஓவியர் வினி ஹெட்டிகொட, சிரேஷ்ட ஓவியர் எஸ்.எச். சரத், புகைப்படக் கலைஞர் சரத் பெரேரா, சஞ்சீவ குமார, வஜிர குணவர்தன, புலஸ்தி எதிரிவீர உள்ளிட்ட நாட்டின் பல முன்னணி மற்றும் சிரேஷ்ட கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டு தமது பங்களிப்பை வழங்கினர்.


கலைக்காக ஒரே நோக்கத்துடன் ஒன்றிணைந்து அவர்கள் ஆற்றிய இந்த கூட்டு அர்ப்பணிப்பு உண்மையிலேயே பாராட்டத்தக்கது. கலைக்குப் புத்துயிர் அளித்து, அழகானதொரு நாளையை உருவாக்கும் இந்த உன்னத கூட்டு முயற்சிக்கு மக்கள் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.