கம்பஹா - நிட்டம்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெபெஹர மயானத்திற்கு அருகில் நேற்று மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நிட்டம்புவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 103 கிராம் 250 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 26 வயதுடைய நிட்டம்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவரென அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் தொடர்பில் பதவிய, கந்தானை, நிட்டம்புவை மற்றும் ராகமை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
