பேரூந்தில் பயணிக்கும் மக்களே அவதானம்-வெளியான எச்சரிக்கை அறிவிப்பு

கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தில் பயணியொருவரின் பணப்பையைத் திருடி, அதிலிருந்த ATM அட்டையைப் பயன்படுத்தி பொருட்களைக் கொள்வனவு செய்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.

26ஆம் திகதி குறித்த பேருந்து கினிகத்தேன பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தபோது, அங்கு ஏறிய சந்தேகநபர் ஒருவர் பணப்பையின் உரிமையாளருக்கு அருகில் அமர்ந்து பொக்கட்டில் வைக்கப்பட்டிருந்த பணப்பையைத் திருடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்தப் பணப்பையில் இருந்த 18,000 ரூபா பணத்தை எடுத்துக்கொண்ட சந்தேகநபர், அதிலிருந்த ATM அட்டையைப் பயன்படுத்தி ஹட்டன் டிக்கோயா நகரிலுள்ள பல்பொருள் அங்காடியொன்றில் முற்பகல்  11.30 மணியளவில் சுமார் 3,000 ரூபா பெறுமதியான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துள்ளார்.

ஹட்டன் நகரைச் சென்றடைந்த பின்னர் பணப்பை காணாமல் போனதை அறிந்த அதன் உரிமையாளர், உடனடியாக பேருந்து நடத்துநருக்கு அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், ATM அட்டையைப் பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டமை தொடர்பான குறுஞ்செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, தனது அட்டையைச் செயலிழக்கச் செய்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாட்டுப் பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.


- ஹட்டன் தலைமையகப் பொலிஸ் பரிசோதகர்: 071 859 1117


- ஹட்டன் பொலிஸ் நிலையம்: 051 222 2222