மட்டு நகரில் இப்படியும் மனிதர்களா-நோயாளி பெண்ணை வீதியில் பரிதவிக்க விட்டு சென்ற சம்பவம்

 

மட்டக்களப்பு திருப்பெருந்துறை வீதியில் நோயாளியான பெண் ஒருவர் அநாதரவாக பரிதவிக்க விட்டு சென்ற நிலையில் அவரை பொலிஸார் மீட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (26) இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி பொலிஸாருக்கு கிடைத்த 119 அவசர இலக்கத்துக்கு கிடைத்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கடும் நோயால் அவதிப்பட்டு அநாதரவாக பரிதவித்துக் கொண்டிருந்த பெண்ணை பிற்பகல் 1.00 மணியளவில் மீட்டு 1990 அம்புலன்ஸ் வரவழைத்து அவரை மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.