சரிகமப லிட்டில் டைட்டில் வின்னர் இவர் தானா? 10 லட்சம் பரிசு! இத்தனை நாள் கஷ்டத்திற்கு கிடைக்கும் வெற்றி

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப லிட்டில் சாப்ஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த ஆறு மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் இன்னும் ஒரு சில வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. இதில் டைட்டில் வின்னராக யார் தேர்வாக போகிறார் என்ற தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 நிகழ்ச்சியின் இறுதி சுற்று போட்டிக்கான ஏற்கனவே சில போட்டியாளர்களை தேர்வு செய்து வைத்திருக்கின்றனர். அதில் மித்ரா, யோகஸ்ரீ, ஸ்ரீமதி, திவினேஷ் போன்ற நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐந்தாவது இறுதிப் போட்டியாளர் யார் என்பதற்காக தேர்வு போட்டிகள் நடைபெற்று வந்தது.

கேள்விகள்

அதில் இந்த வாரத்தில் பாடிய குழந்தைகளில் சிறப்பாக பாடி பலருடைய பாராட்டை பெற்றது அபினேஷ் தான் ஐந்தாவது இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்த பட்டிருக்கிறார். இவரை தொடர்ந்து ஆறாவது போட்டியாளர் தேர்வு நடைபெறுமா? அல்லது வைல்ட் கார்ட் ரவுண்டு நடைபெறுமா? அல்லது ஃப்ரீ பைனல் ஆக இருக்கலாமா? என்ற பல்வேறு கேள்விகளும் எழுந்து வருகிறது.

டாப் 5 போட்டியாளர்கள்

அதே நேரத்தில் சரிகமப லிட்டில் சாப்ஸ் 4 இறுதி சுற்று போட்டி விரைவில் நடைபெற இருக்கிறது. இதனால் பாடகர்களுக்குள் போட்டியும் அதிகரிக்க இருக்கிறது. இந்த போட்டியில் தேர்வான ஐந்து போட்டியாளர்களில் யார் சிறப்பாக பாடி சரிகமப லிட்டில் சாப்ஸ் டைட்டில் வின்னர் ஆகி 10 லட்சம் ரூபாயை அள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது. முதல் பரிசை பெறுபவருக்கு தான் பரிசுத்தொகை கிடைக்கும். இதனாலேயே ஆறு மாதங்களாக பல குழந்தைகள் போட்டி போட்டு வந்தனர்.

மயக்கும் பாடல்

ஒரு சில குழந்தைகளின் பாடல்களை ரெக்கார்ட் செய்து வைத்து விட்டு எப்போது வேண்டாம் என்றாலும் அதை மீண்டும் மீண்டும் கேட்கும் வகையில் பலருடைய மனதை கவர்ந்து விட்டது. அதிலும் திவினேஷ் பலருடைய கவனத்தை ஈர்த்து வருகிறார். பழைய பாடல்கள் இவருடைய குரலால் கேட்கும்போது பலருடைய கவலையெல்லாம் கரைந்து போவதாக கூறி வருகிறார்கள்.

டைட்டில் வின்னர்

அந்த காலத்து பாடல்களிலும் இவ்வளவு அருமை இருக்கிறதா? என்று இந்த காலத்தில் இளைஞர்களையும், குழந்தைகளையும் யோசிக்க வைக்கும் அளவிற்கு திவினேஷ் பாடி வருகிறார். அவரை போல யோகஸ்ரீ பலருடைய பாராட்டைப் பெற்று வருவதால் இவர்கள் இருவரில் தான் ஒருவர் டைட்டிலை வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி வருகிறார்கள்.


இந்த இடுகைகளை நீங்கள் விரும்பக்கூடும்

கருத்துரையிடுக

Enter Image URL / Code Snippets / Quotes / name tag, then click parse button accordingly that you have entered. then copy the parse result and paste it into the comment field.


Cookie Consent

We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.

Google Translate
Bookmark Post