மட்டு கலைமகள் வித்தியாலய மாணவிகள் கலைப்பிரிவில் சாதனை..!

மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலயத்தில் கலைப்பிரிவில் கல்விகற்று எமது பாடசாலையில் இருந்து சட்டத்துறைக்கு தெரிவான செல்வி. அற்புதநாதன் அபிநயா மாவட்ட நிலையில் இரண்டாம் இடத்தினையும் மற்றும் செல்வி கிருபரெத்தினம் தீபகாந்தி மாவட்ட நிலையில் 13ம் இடத்தினை பெற்று பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது எமது பாடசாலைக்கும், எமது சமூகத்திற்கும் மிகப் பெரும் பெருமை தரும் நிகழ்வாகும். கல்வி பயணத்தில் கடந்து வந்த எல்லா தடைகளையும் தாண்டி, ஒவ்வொரு கட்டத்தையும் சாதனையாய் மாற்றியுள்ள இவர்கள், இளம் தலைமுறைக்கு ஒரு மிகப்பெரிய முதற்கொடி போல் விளங்குகிறார்.

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்! மேலும் உயர்ந்த நிலைகளை எட்ட வாழ்த்துகள்!