கொழும்பை உண்டு இல்லை பண்ணும் அடை மழை-விழுந்து முறிந்த மரங்கள்-நசுங்கி போன வாகனங்கள்..!{படங்கள்}

 பொரல்லை கல்லறை சுற்றுவட்டத்திற்கு அருகில் ஒரு மரம் விழுந்ததில் ஏழு வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்து இயக்கத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் தற்போது நடைபெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.