இலங்கையை மிரள வைத்த விபத்து-இரு சகோதரர்கள் பலி-தாய் கவலைக்கிடம்..!

 

குருநாகலில் இடம்பெற்ற வீதி விபத்தில் சகோதரர்களான இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பஸ் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

10 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தங்கள் தாயுடன் நேற்று மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த வேளையிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த தாய் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.