மாணவன் கொலை தொடர்பில் வெளியான தகவல்..?

 வெலகெதர பொலிஸ் பிரிவில் சக பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பதினொரு இளைஞர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

அவர்களில் சில சிறுவர்கள் சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதுடன், மேலும் இருவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாணவன் கொலையில் நீதிமன்றில் 11 பேர் முன்னிலை | A Level Student Beaten To Death Court Oder

ஏப்ரல் 16 ஆம் திகதி தனிப்பட்ட தகராறு காரணமாக சக பாடசாலை மாணவனை இளைஞர்கள் தாக்கியதில் காயமடைந்த சிறுவன் குருநாகல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால், சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள எட்டு சந்தேக நபர்களும் நேற்று பிலேஸ்ச நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர், அதன் பின் இரண்டு சந்தேக நபர்கள் ஏப்ரல் 29 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

மீதமுள்ள ஆறு சந்தேக நபர்கள் வயது குறைந்தவர்கள் என்பதால், அவர்களை சிறார் தடுப்பு மையங்களுக்கு அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

எட்டு சந்தேக நபர்களும் ஏப்ரல் 29 ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மாவத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.