Type Here to Get Search Results !

இலங்கையில் பயங்கரம்-சினிமா பாணியில் நடந்த கொடூர கொலை..!

 

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

67 வயதான அக்கரகல்கொட லுணுகம்வெஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இறந்தவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, ​​பின்னால் வந்த கெப் வண்டி மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் செலுத்துனர் வீதியிலிருந்து இருந்து தூக்கி எறியப்பட்ட பிறகு, சந்தேக நபர் கெப் வண்டியை நிறுத்திவிட்டு, காயமடைந்த நபரை அணுகி, கோடரியால் தாக்கி, கொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கோடாரி மற்றும் கெப் வண்டியுடன் 27 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

லுணுகம்வெஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Bottom Post Ad

AD